தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'டெட்' பாடத்திட்டம் ஆசிரியர்கள் அதிர்ச்சி

'டெட்' பாடத்திட்டம் ஆசிரியர்கள் அதிர்ச்சி

'டெட்' பாடத்திட்டம் ஆசிரியர்கள் அதிர்ச்சி


UPDATED : அக் 30, 2026 04:36 PM

ADDED : அக் 30, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 04:36 PM ADDED : அக் 30, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'டெட்' பாடத்திட்டம், ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பாடத்திட்டத்தை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த சூழலில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என, கடந்த ஆண்டு செப்., 1ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, சிறப்பு 'டெட்' தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வரும் டிச., 20ம் தேதி, சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான, 'டெட்' முதல் தாள் தேர்வு, தமிழகத்தில், ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரையிலான, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான, 'டெட்' இரண்டாம் தாள் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் பாடத்திற்கான, பாடதிட்டம் தவிர்த்து, மற்ற பாடத்திட்டங்கள் அனைத்தும், ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. இது, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த பாடத்திட்டமே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் பாடதிட்டம் வெளியிடுவது தொடர்பாக, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us