sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'நீட்' தேர்வில் 'டாப் ரேங்க்' பெற வேண்டுமா?

'நீட்' தேர்வில் 'டாப் ரேங்க்' பெற வேண்டுமா?

'நீட்' தேர்வில் 'டாப் ரேங்க்' பெற வேண்டுமா?


UPDATED : ஜூன் 03, 2026 08:42 PM

ADDED : ஜூன் 03, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 08:42 PM ADDED : ஜூன் 03, 2026 08:45 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நீட்' என்பது அறிவை மட்டும் பரிசோதிக்கும் தேர்வு அல்ல. அது, வேகம், துல்லியம், நேர மேலாண்மை ஆகியவற்றை பரிசோதிக்கும் தேர்வும் கூட... சரியான திட்டமிடல், தொடர்ச்சியான முயற்சி மற்றும் தினசரி பயிற்சி தான் ஒரு மாணவரை 'டாப் ரேங்க்' வரை கொண்டு செல்கின்றன.

என்.சி.ஆர்.டி., புத்தகத்தை முழுமையாக கற்றல், மாதிரி தேர்வு பரிசோதனை, தொடர் 'ரிவிஷன்' ஆகியவற்றை சரியாக செய்தால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை வாய்ப்பு பிரகாசமாகும். தினசரி பயிற்சி இல்லாமல் 'ரேங்க்' கிடைக்காது. தினசரி பயிற்சியால் வேகம் அதிகரிக்கும், தவறுகள் குறையும், நம்பிக்கை உயரும், தேர்வு பயமும் குறையும்.

மாதிரி தேர்வு எழுதுவது மட்டும் போதாது. அதனை பரிசோதனை செய்து தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் பயிற்சி பெற வேண்டும்.

ஆராய வேண்டிய கேள்விகள்:

* இந்த தவறு ஏன் நடந்தது?
* 'கான்சப்ட்' புரியவில்லையா?
* கவனக்குறைவா?
* நேர அழுத்தமா?
* யூகத்தில் பதில் அளித்ததாலா?

நீங்கள் செய்யும் தவறுகளை குறித்துக்கொள்ள பிரத்யேகமாக 'மிஸ்டேக் நோட்புக்' வைத்துக்கொள்ளுங்கள். அதில், தவறான பதில்கள், பார்முலா தவறுகள், மீண்டும் மீண்டும் நீங்கள் செய்யும் தவறுகள், குழப்பமூட்டும் 'கான்சப்ட்' ஆகியவற்றை குறித்துக்கொண்டு, அதற்கு சிறப்பு பயிற்சி பெறுங்கள். இந்த 'நோட்புக்' உங்களது பலவீனங்களை பலங்கள் ஆக மாற்றும்.

பொன்விதிகள்


சிறந்த 'ரேங்க்' மாணவர்கள் கண்மூடித்தனமாக 14 மணி நேரம் படிப்பது இல்லை; கவனச்சிதறல் இல்லாமல் 8 முதல் 10 மணி நேரம் படிக்கிறார்கள். சமூக ஊடங்களின் பயன்பாட்டை வெகுவாக குறைத்துக்கொள்கின்றனர்; மற்றவர்களுடன் ஒப்பிடுவதில்லை; தினமும் இலக்கு வைத்து அதனை அடைகிறார்கள். மேலும், தேவையான அளவு தூக்கத்திற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

சிறந்த 'ரேங்க்' பெற நிலைத்தன்மையுடன் படிப்பது தான் வெற்றியை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினமும் முன்னேறிக்கொண்டே இருங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரும் 'டாப் ரேங்க்' மாணவர்களின் பட்டியலில் இடம்பெறும்.

''உயிரியல் பாடத்தில் மட்டுமல்லாமல், இயற்பியலிலும் அதிக கவனம் செலுத்துவதால் 'நீட்' தேர்வில் சிறந்த ரேங்க் பெறலாம்'' - கே.கே. ஆனந்த், 'நீட்' பயிற்சியாளர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us