UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 11:12 AM

சென்னை:
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 397 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று, திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாணவர்களில் 92.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, இணை இயக்குனர்கள் செல்வக்குமார், நரேஷ் முடிவுகளை வெளியிட்டனர்.
தமிழகத்தின் 7,532 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 4.08 லட்சம் மாணவர்கள், 3.52 லட்சம் மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 7.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 41,000 பேர் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.53 சதவீதம் உயர்ந்துள்ளது.
மாணவியர் 4.07 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் முன்னிலையில் உள்ளனர். தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளிகளில் 92.11 சதவீதம் பேரும்; சிறைவாசிகளில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், 97.45 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. அனைவரும் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளிலும் திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. அறிவியல், கணிதம் அடங்கிய பாடத்தொகுப்பில் அதிகபட்சமாக 96.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தொழிற்கல்வி அல்லாத பாடங்களில் அதிகபட்சமாக பயோ கெமிஸ்ட்ரி 100 சதவீதம்; மைக்ரோ பயாலஜி 99.93, கணினி அறிவியல் 99.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக கணக்கு பதிவியலில் 96.61 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்
தொழிற்கல்வியில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங்கில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 26,352 பேர், ஏதோ ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 6,996 பேர் சென்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 7 பேர் மட்டுமே பெற முடிந்தது. வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
முதலாம் மொழிப் பாடத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் 10,000 பேர் தேர்ச்சி பெறவில்லை.
மகளிர் பள்ளிகள் டாப்
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் உள்பட, தனியார் சுயநிதி பள்ளிகள், 98.70 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள், 95.49 சதவீதம் மற்றும் அரசு பள்ளிகள், 91.02 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகளில், 94.78; மகளிர் பள்ளிகள், 96.39 மற்றும் ஆண்கள் பள்ளிகள், 88.98 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
100 சதவீத தேர்ச்சி
தேர்வில், 3,227 அரசு பள்ளிகளின் 3.35 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதில், 397 அரசு பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 4,305 தனியார் பள்ளிகளின் 4.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதில், 2,081 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதாவது, 12.30 சதவீத அரசு பள்ளிகளும், 48.33 சதவீத தனியார் பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.
கள்ளர் சீரமைப்பு
பள்ளிகள் முன்னிலை துறை ரீதியான பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் கள்ளர் சீரமைப்பு 95.47பழங்குடியினர் நலத்துறை 95.15சமூக நலத்துறை 93.68நகராட்சி 91.90மாநகராட்சி 90.00ஆதிதிராவிட நலத் துறை 89.42 வனத் துறை 86.36 கடந்த ஆண்டில், வனத்துறை பள்ளிகள், 94.87 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு, 8.51 சதவீதம் தேர்ச்சி குறைந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழில் 35 பேர் சென்டம்
தமிழ் பாடத்தில், 35 பேர், 100க்கு, 100 என்ற, சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவில் 96.35; வணிகவியல், 92.46; தொழிற்கல்வி, 85.85 மற்றும் கலைப் பிரிவில், 85.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பாட வாரியான தேர்ச்சியில், கணினி அறிவியல், 99.80; உயிரியல், 99.35; வேதியியல், 99.14; விலங்கியல், 99.04; தாவரவியல், 98.86; கணிதம், 98.57; இயற்பியல், 98.48; வணிகவியல், 97.77; கணக்குப் பதிவியலில், 96.61 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.
முக்கிய பாடங்களில், 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக கணினி அறிவியலில், 6,996 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல், 6,142; பொருளியல், 3,299; கணிதம், 2,587; கணினி பயன்பாடு, 2,251; கணக்குப் பதிவியல், 1,647; உயிரியல், 652; இயற்பியலில், 633 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வேதியியல், 471; விலங்கியல், 382; வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், 210; தாவரவியல், 90; தமிழ், 35 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெறாதோருக்கு
மனநல ஆலோசனை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ் '104, 14416' என்ற எண்களில் மனநல ஆலோசனை வழங்கப்படும்.தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள ஆலோசனை மையங்களில், 51,919 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பணியை, சுகாதார துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். நூறு மனநல ஆலோசகர்கள் வாயிலாக, மூன்று சுழற்சி முறையில் ஆலோசனை வழங்கப்படும். மாவட்ட நல திட்டத்தின் கீழ் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்படும்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்
எண் மாவட்டம் தேர்ச்சி சதவீதம்1. திருப்பூர் 97.452. சிவகங்கை 97.423. ஈரோடு 97.424. அரியலுார் 97.255. கோவை 96.976. விருதுநகர் 96.647. பெரம்பலுார் 96.448. திருநெல்வேலி 96.449. துாத்துக்குடி 96.3910. நாமக்கல் 96.1011. தென்காசி 96.0712. கரூர் 95.9013. திருச்சி 95.7414. கன்னியாகுமரி 95.7215. திண்டுக்கல் 95.4016. மதுரை 95.1917. ராமநாதபுரம் 94.8918. செங்கல்பட்டு 94.7119. தேனி 94.6520.
சேலம் 94.6021. சென்னை 94.4822. கடலுார் 94.3623. நீலகிரி 94.2724 புதுக்கோட்டை 93.7925. தர்மபுரி 93.5526. தஞ்சாவூர் 93.4627. விழுப்புரம் 93.1728. திருவாரூர் 93.0829. கள்ளக்குறிச்சி 92.9130. வேலுார் 92.5331. மயிலாடுதுறை 92.3832. திருப்பத்துார் 92.3433. ராணிப்பேட்டை 92.2834. காஞ்சிபுரம் 92.2835. கிருஷ்ணகிரி 91.8736. திருவள்ளூர் 91.3237. நாகப்பட்டினம் 91.1938. திருவண்ணாமலை 90.47* புதுச்சேரி 93.38* காரைக்கால் 87.03