UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 09:11 AM
சென்னை:
தாட்கோ சார்பில், பட்டியல் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான, 'ஆதிகலைக்கோல்' பயிற்சி பட்டறை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கியது.
தாட்கோ சார்பில், மூன்று நாள் நடக்கும் இப்பயிற்சி பட்டறையில் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இளைஞர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் மறைக்கப்பட்ட ஆதிவாசி நடனம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலைகள் மற்றும் இலக்கியம் குறித்து, இச்சமூக இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை மீட்பது நிகழ்வின் நோக்கம்.
அதன்படி, நாட்டுப் புறக்கலை, நாடகம், இலக்கியம் மற்றும் காட்சி கலை என, நான்கு பிரிவுகளின் கீழ், இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, துறை சார்ந்த 300க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.