தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'அக்னி 3' ஏவுகணை சோதனை வெற்றி!

'அக்னி 3' ஏவுகணை சோதனை வெற்றி!

'அக்னி 3' ஏவுகணை சோதனை வெற்றி!


UPDATED : பிப் 07, 2026 07:38 PM

ADDED : பிப் 07, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2026 07:38 PM ADDED : பிப் 07, 2026 07:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்:
ஒடிசாவின் சந்த்பூரில் இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடந்த இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை 'அக்னி 3', வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

அக்னி 3 ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது 3000 முதல் 3,500 கி.மீ.,க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.

இந்த ஏவுகணை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us