UPDATED : மே 12, 2024 12:00 AM
ADDED : மே 12, 2024 10:03 PM

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்வி நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. இன்று ஏராளமான கல்லூரிகள் உள்ள நிலையில், சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது சவாலாகவே உள்ளது. எனினும், சில அம்சங்களின் அடிப்படையில் சிறந்த கல்லூரியை அடையாளம் காணலாம்.
சுய பரிசோதனை
மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஆர்வத்தோடு இணைந்த துறைகளை பட்டியலிட வேண்டும். துறைக்கு ஏற்ப சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். ஒரு நிறுவனத்தில் வழங்கப்படும் பாடத்திட்டம் சமகாலத்திற்குரியதா? அது தற்கால கல்வி நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறதா? என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் செயற்கை நுண்ணறிவு (AI)இயந்திரக் கற்றல் (ML) மற்றும் பெருந்தரவுகளை ( Big Data) நோக்கி நகர்கிறது. ஏ.ஐ., மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை தொழில்களை மறுவடிவமைத்து, உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டவர்களின் தேவையை உருவாக்குகிக் கொண்டிருக்கின்றன.
தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், வணிக ரீதியான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் வணிக முயற்சியில் ஈடுபட ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவற்றின் வாயிலாக கல்வி நிறுவனங்கள், மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பாடத் திட்டம் தாண்டிய திறன்கள்
வேலை வாய்ப்பிற்காக மட்டும் வழிநடத்தாமல், வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும் கல்வி நிறுவனங்கள் தயார்ப்படுத்த வேண்டும். அவ்வகையில், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, வெற்றி பெறுவதற்குத் தேவையான, சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் போன்ற பல்துறைத் திறன்களை வளர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், ஆளில்லா புகைப்படப் பயிற்சி (ட்ரோன் பைலட் பயிற்சி) மற்றும் எந்திர மனிதவியல் (ரோபாட்டிக்ஸ்) ஆகிய திறன் மேம்பாட்டுக் கல்விகளை 'உன்னதி' என்ற கல்வி அமைப்பின் வாயிலாக வழங்கி வருகிறது. திறமையான மற்றும் தகுதியான மாணவர்கள், வறுமை காரணமாக, உயர்தரக் கல்வியை இழந்து விடக் கூடாது என்பதால், உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மாணவர்களிடையே தொழில் முனைவோர்க்கான பயிற்சியையும் வழங்குகிறது.