UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 01:23 PM

'பல்துறை சார்ந்த கல்வி பரவலாக அதிகரித்து வரும் சூழலில் குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த மாணவ, மாணவிகள் அதிக மாற்றங்களை காண்பர், கல்லூரிகளில் மாணவராக பெற்ற அறிவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது.
வேலை செல்லும் காலம் முழுவதும் கற்றலை தொடர வேண்டி இருக்கும். பல்வேறு பணிகளை செய்யும் திறன் அதிகம் தேவைப்படும்' என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் & டெக்னாலஜியின் கெளரவ விஞ்ஞானியான அமிதவ கோஷ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், 'சுகாதாரம், சட்டப் பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திட்டமிடல், குடிமை நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' எவ்வாறு மாற்றுகிறது என்பதை தொடர்ந்து கவனியுங்கள்' என்றும் வலியுறுத்தி உள்ளார்.