தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிஞ்சு குழந்தைகளின் கைவிரல் பிடித்து 'அ'னா...'ஆ'வன்னா! 'தினமலர்' நடத்தியது அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

பிஞ்சு குழந்தைகளின் கைவிரல் பிடித்து 'அ'னா...'ஆ'வன்னா! 'தினமலர்' நடத்தியது அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

பிஞ்சு குழந்தைகளின் கைவிரல் பிடித்து 'அ'னா...'ஆ'வன்னா! 'தினமலர்' நடத்தியது அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி


UPDATED : அக் 21, 2026 04:32 PM

ADDED : அக் 21, 2026 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:32 PM ADDED : அக் 21, 2026 04:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
விஜயதசமி நாளான நேற்று, 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில் 'அ'னா...'ஆ'வன்னா… அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி ராம்நகர், ஐயப்பன் பூஜா சங்கத்தில் கோலாகலமாக நடந்தது.

காலை 07:35 மணிக்கு நிகழ்ச்சி துவங்கிய நிலையில், 07:00 மணியில் இருந்தே, குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமாக வரத்துவங்கினர். குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்துக்கு பிள்ளையார் சுழி போடும் நாளல்லவா!

பூஜையுடன் விழா துவங்கியது. சிறப்பு விருந்தினர்களாக, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, கதிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கதிர், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, வழக்கறிஞர் விஜயரகுநாத் ஆகியோர் பங்கேற்றனர். நெல்லில் விரலி மஞ்சள் பிடித்து, எழுத பழக்கி குழந்தைகளை சிறப்பு விருந்தினர்கள் ஆசிர்வதித்தனர்.

கல்விப் பயணத்தின் துவக்க விழாவான இந்நிகழ்ச்சியில், 250 குழந்தைகளுடன் பெற்றோர் மட்டுமல்லாமல், தாத்தா, பாட்டிகளும் பங்கேற்றனர்.

அனைத்து குழந்தைகளுக்கும், ஸ்கூல் பேக், சில்வர் வாட்டர் கேன், கிரேயான் பென்சில் அடங்கிய கிப்ட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது.

கோ ஸ்பான்சர் ஆக இணைந்த ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் குட்டீஸ்க்கு வேட்டி சட்டை பரிசாக வழங்கப்பட்டது.

எங்களுக்கு பெருமை


என் மகள் தன்விக்கு இரண்டே முக்கால் வயதாகிறது. அவள், கல்வி, அறிவில் சிறந்தவளாக உருவாக வேண்டுமென்பதற்காக தான், 'தினமலர்' நாளிதழின் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு வந்தோம். அவளின் கல்விப்பயணத்தை, இங்கிருந்து துவக்குவதில் எங்களுக்கு பெருமையே.

- சரண், செல்வபுரம்.

ஏற்பாடுகள் பிரமாதம்


குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருப்பதால், கூட்டமாக இருந்தால் என்ன செய்வதென யோசித்தபடியே தான் வந்தேன். எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பூஜை, ஆளுமைகளின் ஆசிர்வாதம், கிப்ட் என எல்லாமே சூப்பர்.

- நிவேதிதா, ராமநாதபுரம்.

தினமலரின் ஆசிர்வாதம்


என் மகள்வழி பேத்திக்கு மூன்றரை வயதாகிறது. அறிவிப்பு செய்தித்தாளில் பார்த்ததும் முன்பதிவு செய்து அழைத்து வந்துவிட்டேன். என் பேத்தி எதிர்காலத்தில் சிறந்த பண்புள்ளவளாக வளர, 'தினமலர்' நாளிதழின் ஆசிர்வாதம் வேண்டுமல்லவா.

- கணேசன், உடையாம்பாளையம்.

ஆளுமைகளின் ஆசிர்வாதம்


என் மகன் ரிபுபிரணவ் நிகழ்ச்சியை பார்த்ததும் குஷியாகிவிட்டான். விரல் பிடித்து எழுத பழக்கிய கலெக்டர் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளும் ஆசிர்வதித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

- ஆனந்த், கவுண்டம்பாளையம்.

முதல் எழுத்து


என் மகன் ருத்ரவ்வுக்கு இரண்டரை வயதாகிறது. அவனை இன்னும் விரல் பிடித்து எழுத பழக்கவில்லை. வித்யாரம்பம் செய்த பிறகே, சிலேட் வாங்க வேண்டுமென அம்மா கூறிவிட்டார். நிகழ்ச்சி மிக சிறப்பாக இருந்தது.

- பொன்னீஸ்வரி, சேரன்மாநகர்.

நெகிழ்ச்சியான தருணம்


என் பேத்தியின் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக வந்தேன். ஏற்பாடுகள் மிக சிறப்பாக உள்ளன. பூஜையுடன் முறைப்படி நிகழ்ச்சி துவங்கியது. என் பேத்தி நிச்சயம் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.

- ஜோதி, ஆவாரம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us