UPDATED : நவ 12, 2026 02:25 PM
ADDED : நவ 12, 2026 02:26 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர், செல்வபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், எல் நினோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில், “பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிப்பதால் ஏற்படும் எல் நினோ, உலகளாவிய காற்றோட்டம், மேகங்களின் நகர்வு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது,” என்றார்.
உதவி தலைமை ஆசிரியர் சுமதி, மழைப்பொழிவு குறைவு, வெப்ப அலைகள் குறித்து விளக்கினார். மங்கை பாரதி பதிப்பகம் சார்பில் கந்தசுவாமி, 'எல் நினோவால்' இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த தொகுப்பை பள்ளிக்கு வழங்கினார்.
