UPDATED : மே 05, 2025 12:00 AM
ADDED : மே 05, 2025 11:37 AM

நாட்டில் அனைவரும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டனர் என பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஈரோடு, திருப்பூரில், வயோதிகர்களை கொலை செய்து நகைகளை களவாடி சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன. முதியோர், குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்து வருகிறது. ஆனால், சட்டசபையில் முதல்வர் பேசும்போது, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறினார்.
த.வெ.க.,விலிருந்து வெளியேறிய வைஷ்ணவி, மக்கள் பணி செய்ய விரும்பினால், பா.ஜ.,வில் இணைந்து பணியாற்றலாம்.
தமிழகத்தில் தி.மு.க., அரசு, நீட் குறித்து பொய் பிரசாரங்களை பரப்பி வருகிறது. ஆனாலும், ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதுவோரும், தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நீட் தேர்வை, அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற, நீட் ஒரு வரப்பிரசாதம்.
இவ்வாறு கூறினார்.

