'மாணவர்களின் மனநலமும், நல்வாழ்வும் முக்கியம்: மாநில கல்வி கொள்கையில் இது எதுவும் காணோம்'
'மாணவர்களின் மனநலமும், நல்வாழ்வும் முக்கியம்: மாநில கல்வி கொள்கையில் இது எதுவும் காணோம்'
UPDATED : நவ 22, 2025 10:48 AM
ADDED : நவ 22, 2025 10:50 AM

கோவை:
பள்ளி மாணவர்களிடையே சமீபகாலமாக அதிகரித்து வரும் மனநலம் சார்ந்த பிரச்னைகள், அவர்கள் எடுக்கும் விபரீத முடிவுகள் குறித்து, தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு, கல்வியோடு இணைத்து தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்பெல்லாம் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மட்டுமே, மாணவர்கள் பயந்து விபரீத முடிவுகளை எடுக்கும் சூழல் இருந்தது. ஆனால், இப்போது சக மாணவன் பென்சில் தரவில்லை என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகக் கூட, மாணவர்கள் விபரீத முடிவுகளை நாடுகின்றனர்.
ஆசிரியர்கள் சிறு கண்டிப்பு காட்டினாலோ அல்லது திட்டினாலோ, கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது; பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, பள்ளிக்கு செல்லாமல் இருப்பது; தங்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்றி, உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பது ஆகியவை நடக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கை 2020, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை வழங்குவதற்காக அவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அவர்களின் மனநலமும், நல்வாழ்வும் முக்கியம் என வலியுறுத்துகிறது. மாநிலக் கல்வி கொள்கையில் இது சார்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, செயலில் இல்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.
தேசிய கல்விக் கொள்கை 2020, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை வழங்குவதற்காக அவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அவர்களின் மனநலமும், நல்வாழ்வும் முக்கியம் என வலியுறுத்துகிறது.
'மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வியல்ல' தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி அல்ல. மனநலம், சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்தல், பிரச்னைகளை கையாளும் திறன் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுத்தருவதுதான், ஆக்கப்பூர்வமான கல்வி முறை. எந்த மாவட்டத்தில் மாணவர்கள் சார்ந்த பிரச்னைகள் அதிகமாக உள்ளன; எந்த பகுதி அல்லது பள்ளிகளில் மாணவர் -ஆசிரியர் உறவில் அதிக விரிசல் மற்றும் புகார்கள் எழுகின்றன என்பதை ஆய்வு செய்து, பிரச்னைக்குரிய இடங்களை அடையாளம் கண்டு, அங்கு மாணவர் நலன் சார்ந்த உளவியல் ஆலோசனை மற்றும் தீர்வுகளை, கல்வியோடு இணைத்து வழங்க வேண்டும்,'' என்றார்.

