தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்பூங்கா பணியாளருக்கு 4 இடங்களில் தங்கும் விடுதி

தொழில்பூங்கா பணியாளருக்கு 4 இடங்களில் தங்கும் விடுதி

தொழில்பூங்கா பணியாளருக்கு 4 இடங்களில் தங்கும் விடுதி


UPDATED : மே 31, 2024 12:00 AM

ADDED : மே 31, 2024 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2024 12:00 AM ADDED : மே 31, 2024 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசின் உறைவிட நிதியத்தில் இருந்து, சென்னை அடுத்த சிறுசேரியில் உள்ள, சிப்காட் தொழில் பூங்காவில்பணிபுரியும் பணியாளர்களுக்கு,800 படுக்கை வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டும் பணி துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டைஉட்பட நான்கு இடங்களில் தங்கும் விடுதிகட்டுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கிஉள்ளன.

மாநிலம் முழுதும் உள்ள சிப்காட்நிறுவனத்தின், 28 தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில்,7.50 லட்சத்திற்கும் அதிகமானோர்பணிபுரிகின்றனர். பலர் சொந்த ஊரைவிட்டு வந்து, அறை வாடகைக்கு எடுத்துஅதிகம் செலவிடுகின்றனர்.

எனவே, தொழில் பூங்கா வளாகத்திலேயே ஆண், பெண் பணியாளர்களுக்கு தனித்தனியே தங்கும் விடுதிகள் கட்டி தருவதற்கு, உள்கட்டமைப்பு நிதி நிறுவனமும்,சிப்காட்டும் இணைந்து, தமிழக தொழிலாளர் குடியிருப்பு நிறுவனம் என்ற சிறப்புமுகமையை ஏற்படுத்தி உள்ளன.

அதன் வாயிலாக, சென்னை அடுத்தசிறுசேரி சிப்காட் தொழில் பூங்காவில், 807 படுக்கைகள் உடன் பணிபுரியும் மகளிர்தங்கும் விடுதி கட்டும் பணி தற்போதுதுவங்கியுள்ளது. ஒன்று, இரண்டு, நான்கு படுக்கைவசதிகளுடன் தங்குமிடம் அமைக்கப்படுகிறது. ஒரு படுக்கை வசதி கட்டுமானத்திற்கு சராசரியாக, 5 லட்சம் ரூபாய் செலவாகிறது.

இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில்இருங்காட்டுக் கோட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் சூளகிரி ஆகிய சிப்காட் தொழில் பூங்காக்களிலும் பணிபுரியும்பணியாளர்களின் வசதிக்காக தங்கும்விடுதிகள் கட்டப்பட உள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கைதயாரிப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us