தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/40 பேராசிரியர்களின் பதவி உயர்வு முறைகேடு: கிடப்பில் கமிட்டி பரிந்துரை

40 பேராசிரியர்களின் பதவி உயர்வு முறைகேடு: கிடப்பில் கமிட்டி பரிந்துரை

40 பேராசிரியர்களின் பதவி உயர்வு முறைகேடு: கிடப்பில் கமிட்டி பரிந்துரை


UPDATED : ஜூன் 12, 2021 12:00 AM

ADDED : ஜூன் 12, 2021 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2021 12:00 AM ADDED : ஜூன் 12, 2021 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் பதவி உயர்வு முறைகேடு குறித்து ஓய்வு நீதிபதி அக்பர்அலி கமிட்டி அளித்த பரிந்துரையை கிடப்பில் போட்ட துணைவேந்தர் கிருஷ்ணனுக்கு பல்கலை பேராசிரியர்கள் சங்கம் (மூ.பா.,) கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சங்க பொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நடந்தது. 
இதில் நடந்த விவாதம், தீர்மானம் குறித்து துணைவேந்தர் கிருஷ்ணனிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: 

செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது 40 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதில் சிலருக்கு தகுதி இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி ஓய்வு நீதிபதி அக்பர்அலி கமிட்டி விசாரித்து 2019 நவ.,5ல் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 40 பேராசிரியர்களின் பதவி உயர்வை மறுபரிசீலிக்க பரிந்துரைக்கப்பட்டது. 
நடவடிக்கை எடுக்க துணைவேந்தருக்கு சிண்டிகேட் கூட்டம் அதிகாரம் வழங்கியது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது தன்னிச்சை முடிவுகளால் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகி குழப்பம் ஏற்பட்டது.
பதவி உயர்வு முறைகேடுக்கு தீர்வு காணாத நிலையில், புதிய பதவி உயர்வு வழங்க துணைவேந்தர் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். இதை கண்டித்து ஜூன் 22ல் பல்கலையில் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us