தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிக்குமா

40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிக்குமா

40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிக்குமா


UPDATED : நவ 02, 2009 12:00 AM

ADDED : நவ 02, 2009 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2009 12:00 AM ADDED : நவ 02, 2009 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.
பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது.  மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது.


நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, கமிஷன் அவ்வப்போது கண்காணித்து வருகிறது. சில பல்கலைக்கழகங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், மாணவர்களிடம் பலவகையில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன.

அவ்வப்போது, இது தொடர் பாக கமிஷன் சார்பிலான குழு விசாரித்து, அறிக்கை சமர்ப் பித்தாலும், இந்த பல்கலைக் கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, அதன் நிகர்நிலை அந்தஸ்தை பறிக்கவோ முடியவில்லை.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்றதும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40
பல்கலைக்கழகங்கள் தனது நிகர் நிலை அந்தஸ்தை தக்கவைக்க முடியாத சூழ்நிலையில் இயங்குகின்றன என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்தமுள்ள 84  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்,  44ல் பாதிக்கு மேல் அடிப்படை வசதிகள், ஆராய்ச்சி மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தியுள்ளன சில பல்கலைக்கழங்கள் அதற்கு உத்தரவாதமும் தந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மீதி உள்ள 40 பல்கலைகள், தனது அந்தஸ்தை திரும்ப பெறமுடியாத நிலையில் உள்ளன.  இந்த 40ல் அரியானாவில் மூன்றும், உத்தரகாண்ட், உ.பி.,யில் தலா இரண்டும் இயங்கி  வருகின்றன.  பெரும்பாலானவை  தமிழகம் உட்பட  தென்மாநிலங்களில்  இயங்குகின்றன.

இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் அரசியல் பிரபலங்கள் தொடர்பு உள்ளது அதனால்,  இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனினும், மூன்றாண்டு வரை  இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கெடுவிதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us