UPDATED : ஜூலை 26, 2024 12:00 AM
ADDED : ஜூலை 26, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 சென்னை:
 வங்கதேசத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 42 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.
வங்கதேசத்தில், தொடர் போராட்டம், கலவரம் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அங்கு படிக்க சென்ற தமிழக மாணவர்கள், 21ம் தேதி முதல், பாதுகாப்பு கருதி தமிழகம் திரும்பி வருகின்றனர்.
நான்காவது நாளாக நேற்று முன்தினம் இரவு, 42 மாணவர்கள், கவுகாத்தி, அகர்தலா, கோல்கட்டா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து, சென்னை வந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுவரை, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், வங்கதேசத்தில் இருந்து தமிழகம் திரும்பி உள்ளனர்.

