தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெல்டா மாவட்டங்களில் 4,492 போலி புத்தகங்கள் நுாலகங்களில் இருந்து அகற்றம்

டெல்டா மாவட்டங்களில் 4,492 போலி புத்தகங்கள் நுாலகங்களில் இருந்து அகற்றம்

டெல்டா மாவட்டங்களில் 4,492 போலி புத்தகங்கள் நுாலகங்களில் இருந்து அகற்றம்


UPDATED : நவ 17, 2026 09:24 PM

ADDED : நவ 17, 2026 09:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 09:24 PM ADDED : நவ 17, 2026 09:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை ஈ.வே.ரா., நுாலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயர்களில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு நுால்களின் தகவல்களை ஒருங்கிணைத்து, போலியான தலைப்புகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், எழுத்தாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, நூலகங்களுக்கு புத்தகங்களைப் பரிந்துரை செய்தது மற்றும் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, சர்ச்சைக்குரிய இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்கள் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பொது நுாலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு சார்பில் கடந்த 2024 - 25 மற்றும் 2025 - 26 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் விநியோகிக்கப்பட்ட புத்தகங்கள் குறித்த விவரங்களை வைத்து ஆய்வுகள் நடந்தப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நுாலகம், கிளை நுாலகங்கள், ஊரக நுாலங்கள் என 106 நுாலங்களில் இருந்து அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்புகளின் 2,108 புத்தகங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 85 நுாலங்களில் இருந்து 1,580 புத்தகங்களும், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 47 நுாலங்களில் இருந்து 804 புத்தகங்களும், கடந்த 10 நாட்களில் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய அனைத்து புத்தகங்களும், நுாலக பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, மூட்டைகளில் தனியாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us