பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி தளத்தில் 4,535 பேர் பதிவு
பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி தளத்தில் 4,535 பேர் பதிவு
UPDATED : ஆக 19, 2025 12:00 AM
ADDED : ஆக 19, 2025 08:27 AM

புதுடில்லி:
பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உத்யம் சகி (https://udyamsakhi.com) தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளம் மூலம் பெண்கள் தங்கள் வர்த்தகங்களைத் தொடங்கவும், வளர்ச்சியடையவும், தற்சார்பு அடையவும் தேவையான தகவல்களை பெற முடியும். அமைச்சகத்தின் முத்ரா, பிரதமர் வேலைவாய்ப்பு உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதித் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் பற்றிய தகவல்களும் இதில் வழங்கப்படுகின்றன.
அதேபோல், அமைச்சகம் நடத்தும் கண்காட்சிகள், வர்த்தகக் காட்சிகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்த விவரங்களும் இந்த தளத்தின் மூலம் அறியலாம்.
இதுவரை 4,535 பெண் தொழில்முனைவோர் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.