இ.எஸ்.ஐ., சந்தாதாரர் வாரிசுகளுக்கு 466 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
இ.எஸ்.ஐ., சந்தாதாரர் வாரிசுகளுக்கு 466 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:33 AM

புதுச்சேரி:
இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசுகளுக்காக, மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 466 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பல் மருத்துவம், செவிலியர் படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 11 இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லுாரிகள், ஒரு பல் மருத்துவ கல்லுாரி, 2 செவிலியர் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் குறிப்பிட்ட சில இடங்கள், இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள் வாரிசுகளுக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க இ.எஸ்.ஐ., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரியானா, மேற்குவங்காலம் கொல்கத்தா, கர்நாடகா, ஹைதரபாத், ராஜஸ்தான், பாட்னா, கோயம்புத்துார் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி, இமாச்சல்பிரதேசம் கல்லுாரி, கேரள மாநிலம் கொல்லம் அரசு மருத்துவ கல்லுாரி என 11 கல்லுாரிகளில் 466 எம்.பி.பி.எஸ்., இடங்கள், இ.எஸ்.ஐ., சந்தாாரர்கள் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தவிர, கர்நாடகாவில் உள்ள இ.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரியில் 28 பி.டி.எஸ்., இடங்களும், பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ., நர்சிங் கல்லுாரியில் 30, கர்நாடகா குல்பர்காவில் உள்ள இ.எஸ்.ஐ. நர்சிங் கல்லுாரியில் 30 என, 60 பி.எஸ்.சி., நர்சிங் இடங்கள் உள்ளது.
இந்த கல்லுாரிகளில் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் படிப்புகள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு சேர்க்கை வழங்கப் படும். இ.எஸ்.ஐ., மருத்துவ, பல் மருத்துவம், செவிலியர் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசு மாணவர்கள், www.esic.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.