47-வது விமானத் தேர்வுப் பயிற்சிப் பட்டமளிப்பு விழா
47-வது விமானத் தேர்வுப் பயிற்சிப் பட்டமளிப்பு விழா
UPDATED : மே 25, 2025 12:00 AM
ADDED : மே 25, 2025 08:42 AM

சென்னை:
இந்திய விமானப்படையின் விமானிகள் சோதனை பயிற்சிப் பள்ளியின் 47வது விமானத் தேர்வுப் பாடப் பயிற்சி பெங்களூருவில் உள்ள விமானம் மற்றும் அமைப்புகள் சோதனை நிறுவனத்தில் நடைபெற்றது.
விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங், இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டம் பெற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். விமானத் தேர்வுப் பாடநெறிப் பயிற்சி 48 வார கால கடுமையான பயிற்சியாக நடைபெறுகிறது.
விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் ஏ.பி. சிங் பேசுகையில், ஒரு சிறப்புத் துறையாக இந்த சோதனைப் பயிற்சித் துறையின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். இதற்கு உயர்தர தொழில்முறை திறன், நேர்மை, சேவைக்கு அர்ப்பணிப்பு ஆகியவை தேவை என அவர் கூறினார்.
பலவகையிலும் சிறப்பு நிலை பெற்ற (ஆல்ரவுண்ட்) ஸ்குவாட்ரன் லீடர் எஸ் பரத்வாஜுக்கு சுரஞ்சன் தாஸ் கோப்பை வழங்கப்பட்டது. விமான மதிப்பீட்டில் சிறந்த மாணவர் சோதனை விமானிக்கான விமானப் பணியாளர்களின் தலைமை கோப்பை, ஸ்குவாட்ரன் லீடர் அஜய் திரிபாதிக்கு வழங்கப்பட்டது. விமான மதிப்பீட்டில் சிறந்த மாணவர் சோதனை பொறியாளருக்கான டன்லப் கோப்பை, விங் கமாண்டர் அஸ்வினி சிங்குக்கு வழங்கப்பட்டது.