தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை; மதுரை மருத்துவக்கல்லூரி ஆய்வகம் அசத்தல்

5 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை; மதுரை மருத்துவக்கல்லூரி ஆய்வகம் அசத்தல்

5 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை; மதுரை மருத்துவக்கல்லூரி ஆய்வகம் அசத்தல்


UPDATED : நவ 14, 2020 12:00 AM

ADDED : நவ 14, 2020 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2020 12:00 AM ADDED : நவ 14, 2020 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகம் அசத்தியுள்ளது. மாநிலத்திலேயே இது தான் அதிகம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பட பரிசோதனைகளை அதிகப்படுத்தியது முக்கிய காரணம். இதற்காக அரசு தரப்பில் 66, தனியார் வசம் 141 என 207 பரிசோதனை கூடங்கள் செயல்படுகின்றன. தற்போது தினமும் 77 ஆயிரம் பேரின் மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. 2200 பேர் வரை பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கின்றனர். இதுவரை 1.05 கோடி பேர் சோதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலேயே ஒரு மாநிலம் மேற்கொண்ட அதிகபட்ச பரிசோதனை இதுவாகும். இந் நிலையில் தமிழகத்திலேயே அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வைராலஜி ஆய்வகம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இங்கு மேற்கொண்ட பரிசோதனை எண்ணிக்கை நேற்று 5 லட்சத்தை கடந்தது.
மொத்தமுள்ள 207 பரிசோதனை கூடங்களில் இங்கு மட்டும் 4.76 சதவீத பரிசோதனைகள் நடந்துஉள்ளன. மதுரை மட்டுமின்றி கோவை, நீலகிரி மாவட்டங்களில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகளின் ஒரு பகுதியையும் இந்த ஆய்வகமே சோதிக்கிறது. தினமும் 4800 முதல் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.
டீன் சங்குமணி கூறியதாவது:
மார்ச் 25 முதல் 24 மணி நேரமும் வைராலஜி ஆய்வகம் செயல்படுகிறது. ஆய்வக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், முதுகலை மாணவர்கள், உதவியாளர்கள் அயராத பணியை மேற்கொள்கின்றனர். பரிசோதனை முடிவு களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள குருஞ்செய்தி, இணையதளத்தில் வசதி செய்துள்ளோம். இப்பணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர், செயலர், கலெக்டர் ஊக்கமளிக்கின்றனர்&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us