sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5 லட்சம் காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: அன்புமணி

5 லட்சம் காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: அன்புமணி

5 லட்சம் காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: அன்புமணி


UPDATED : ஜூன் 01, 2026 10:06 AM

ADDED : ஜூன் 01, 2026 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 10:06 AM ADDED : ஜூன் 01, 2026 10:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், 5 லட்சத்தை கடந்த நிலையில், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தினார்.

அவரது அறிக்கை:


மே மாதத்தின் கடைசி பணி நாளில், தமிழக அரசு துறைகளில் 5,000க்கும் அதிகமானோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து, அரசு துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., மொத்தம் 5 லட்சத்து 50,000 பேருக்கு அரசு வேலை வாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், 50,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 'அரசு துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்' என வாக்குறுதி அளித்துள்ளது.

அதன்படி, அரசு துறை காலியிடங்களை நிரப்பி, இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'தமிழக கல்லுாரி கல்வி கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ரத்து செய்துவிட்டு, கல்லுாரி கல்வி இயக்குநராக, உயர்கல்வி குறித்த அனுபவம் பெற்ற, மூத்த கல்லுாரி முதல்வரை நியமிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us