தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிக விண்ணப்பங்களை பெற்ற 5 அரசு கல்லூரிகள்; கணினி அறிவியல் பாடத்திற்கு மவுசு!

அதிக விண்ணப்பங்களை பெற்ற 5 அரசு கல்லூரிகள்; கணினி அறிவியல் பாடத்திற்கு மவுசு!

அதிக விண்ணப்பங்களை பெற்ற 5 அரசு கல்லூரிகள்; கணினி அறிவியல் பாடத்திற்கு மவுசு!


UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM

ADDED : ஜூன் 02, 2025 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM ADDED : ஜூன் 02, 2025 09:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், நடப்பாண்டில் அதிகமானோர் இளநிலை கணினி அறிவியல் பட்ட வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை பிரசிடென்சி கல்லூரிக்கு மட்டும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து, மேற்படிப்பு படிக்க கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரப்பெற்ற டாப் 5 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் வருமாறு:

1. பிரசிடென்சி கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 40,167 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

2. கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,727 இடங்களுக்கு 33,753 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

3. நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,430 இடங்களுக்கு 29,376 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

4. அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,086 இடங்களுக்கு 29,275 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

5. திருச்சி பெரியார் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,600 இடங்களுக்கு 24,396 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் உள்ள 2038 இடங்களுக்கு 23 ஆயிரத்து 18 மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து பி.ஏ. தமிழ், பி.காம், பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி வேதியியல் மற்றும் பி.ஏ. பொருளாதாரம் பாடத்தில் கல்வி பயில அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இந்த ஆண்டு 179 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,465 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கை இணையதளம் மூலம் இதுவரை 1,87,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பிரசிடென்சி கல்லூரி இந்த ஆண்டு பிஎஸ்சி வேதியியலுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை வந்துள்ளன.

கடந்த ஆண்டு, அரசு கல்லூரி சேர்க்கைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. ஜூன் 14ம் தேதி வரை தொடரும் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 16ம் தேதியும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30ம் தேதியும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us