தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகிவிடும்

50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகிவிடும்

50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகிவிடும்


UPDATED : ஜன 27, 2026 09:51 AM

ADDED : ஜன 27, 2026 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 09:51 AM ADDED : ஜன 27, 2026 09:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் சார்பில், எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 70க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய துணை இயக்குநர் கருணாகரன் பேசுகையில், “உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, எதிர்காலத்தில் சுமார் 1.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 90 லட்சம் வேலைகள் முற்றிலும் மாறும்; 50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி மறைந்து போகும். டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் ஆகியவையே இந்த மாற்றங்களின் முக்கிய காரணிகள்,” என்றார்.

எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக (நான் முதல்வன்) மேலாளர் கனிமொழி, ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை, இயக்குனர் கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us