தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 லட்சம் மாணவ உறுப்பினர்கள்: நூலகத்துறை திட்டம்

50 லட்சம் மாணவ உறுப்பினர்கள்: நூலகத்துறை திட்டம்

50 லட்சம் மாணவ உறுப்பினர்கள்: நூலகத்துறை திட்டம்


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அடுத்த ஆண்டு பொது நூலகத் துறையின் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோரை, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுநூலகத்துறை இயக்குனர் அறிவொளி கூறினார்.

பொதுநூலக இயக்ககத்தின் சார்பில், நமது உலகம் நூலகம் என்ற சிறப்பு திட்டம், துவங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியரிடம் நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, வாசகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

வட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 93 மாணவ, மாணவியருக்கு மாநில அளவில் நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. கிழக்கு தாம்பரம், ஜெயகோபால் கரோடியா பள்ளியில் நடந்த போட்டியை, பொது நூலகத் துறை இயக்குனர் அறிவொளி துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: இன்றைய மாணவர்கள், நூலகத்தை நாடிச் செல்வது அரிதாக உள்ளது. இந்த நிலையை மாற்றவே, நமது உலகம் நூலகம்&' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் கட்டாயம் நூலக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன் மூலம், தற்போது 10 லட்சம் மாணவ, மாணவியர் நூலகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், 2.5 கோடி ரூபாய் வைப்பு தொகை கிடைத்துள்ளது. தற்போது நடக்கும் போட்டியில் முதல் இடம் பிடிப்போர், சிங்கப்பூர் சுற்றுலாவிற்கும், இரண்டாம் இடம் பிடிப்போர், இந்திய சுற்றுலாவிற்கும், மூன்றாம் இடம் பிடிப்போர் தமிழக சுற்றுலாவிற்கும் அழைத்து செல்லப்படுவர். அடுத்த ஆண்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு, போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் குறைந்தது ஓராண்டு காலமாவது நூலகத்தில் உறுப்பினராகவும், ஆண்டிற்கு 40 முறை நூலகத்திற்கு சென்றிருக்கவும் வேண்டும். இதற்காக, மாணவர்களுக்கு பாஸ் புக் வழங்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம், அடுத்த மூன்று மாதங்களில் 50 லட்சம் மாணவ, மாணவியரை நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us