தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 ஆயிரம் பொறியியல் காலி இடங்கள்

50 ஆயிரம் பொறியியல் காலி இடங்கள்

50 ஆயிரம் பொறியியல் காலி இடங்கள்


UPDATED : ஆக 09, 2011 12:00 AM

ADDED : ஆக 09, 2011 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2011 12:00 AM ADDED : ஆக 09, 2011 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த மாதம், 8ம் தேதி முதல் நடந்து வரும் பொறியியல் கவுன்சிலிங்கில், கடந்த, 7ம் தேதி நிலவரப்படி, 92 ஆயிரத்து, 168 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும், 56 ஆயிரத்து, 799 இடங்கள் காலியாக உள்ளன. 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிகிறது. 12ம் தேதி, துணை கவுன்சிலிங் நடக்கிறது.

மீதமுள்ள நாட்கள் சேர்த்து, 6,799 இடங்கள் நிரம்பினாலும், 50 ஆயிரம் இடங்கள் அப்படியே இருக்கும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை. அண்ணா பல்கலை நடத்தும் பொறியியல் கல்லூரிகளில், 840 இடங்கள் காலியாக உள்ளன.

அதுவும், சென்னை அண்ணா பல்கலை நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் கல்லூரிகளில், காலியிடங்கள் இல்லை. வெளியூர்களில் இயங்கும் அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கல்லூரிகளில் தான் இந்த காலியிடங்கள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இதற்கிடையே, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு இறுதிக்கட்ட கவுன்சிலிங், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 16ம் தேதி கவுன்சிலிங்கில், கட்-ஆப் 138.33 மதிப்பெண்களில் இருந்து, 127 மதிப்பெண்கள் வரையும், 17ம் தேதி, 125.33ல் இருந்து, 86.17 மதிப்பெண்கள் வரை இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us