52 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பழைய மாணவர்கள்
52 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பழைய மாணவர்கள்
UPDATED : பிப் 17, 2015 12:00 AM
ADDED : பிப் 17, 2015 11:08 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் 1962-63 ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவ, மாணவியர் 42 பேர், 52 ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளியில் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களது குடும்பத்தினர், ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர். மாணவர்களில் பலர் டாக்டர், இன்ஜினியர், தொழிலதிபர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.
டில்லி தேசிய அனல் மின் கழகத்தில் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சங்கரலிங்கம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பள்ளிப்பருவ நிகழ்வுகளை விவரித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
