தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5.53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

5.53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

5.53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 09:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 09:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையில் 5.53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நாடு முழுதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் அதற்கான முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் 77.76 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில், 5 வயதுக்கு உட்பட்ட 5.53 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு மார்ச் 3ம் தேதி, 115 பேருந்து நிலையங்கள், 46 நடமாடும் மையங்கள் உட்பட 1,646 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்படும்.இதற்காக, 7,000 பணியாளர்கள் ஈடுபடுத்த உள்ளனர். இந்த முகாம் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us