UPDATED : ஆக 23, 2026 06:22 PM
ADDED : ஆக 23, 2026 06:29 PM
கோவை:
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி சேர்க்கை முகாமில், 58 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த முகாமில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த 114 மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் பங்கேற்றனர்.
கலை அறிவியல் கல்லூரிகளில் 9; ஐ.டி.ஐ.,யில் 18; பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5; திறன் பயிற்சி நிறுவனங்களில் 26 பேர் என 58 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கப்பட்டது.
“கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. மாற்றுத்திறனை குறையாக பார்க்காமல், முன்னேற்றத்துக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என, கலெக்டர் பவன்குமார் பேசினார்.
4 மாணவர்களுக்கு கல்லூரி படிப்புக்கான இலவச சேர்க்கை ஆணைகளையும் அவர் வழங்கினார்.
