தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6 கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி

6 கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி

6 கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி அறிவித்த புதிய அறிவிப்புகளில், 6 திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி அமல்படுத்தப்பட உள்ளது.

கடந்த 17ல், பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, துறை அமைச்சர், வீரமணி, சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், 8ம் வகுப்பு வரை படித்து படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிப்பது; 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, விளையாட்டு சாதனங்கள் வழங்குவது உட்பட பல திட்டங்களை அமைச்சர் வெளியிட்டார்.

மேலும், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு 1.63 கோடி ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி அளித்தல் உட்பட 6 வகையான திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி அமல்படுத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us