UPDATED : ஏப் 12, 2011 12:00 AM
ADDED : ஏப் 12, 2011 04:48 PM
அ நிறம் | அளவு
போதுமான வசதிகள் இல்லாததால், தகுதி இழப்பு அபாயத்தில் இருக்கும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பதில்களை ஆராய உச்ச நீதிமன்றம் 6 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
அந்த
பதில்களை ஆராயக்கூடிய நிபுணர் குழுவிற்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 3 பேரைக் கொண்ட அந்த நிபுணர் குழுவிலிருந்து ஒரு நபர் விலகிவிட்டதால், விரைவில் அந்த குழுவானது மறுநிர்மாணம் செய்யப்பட உள்ளது.மேலும்
இந்த நிபுணர் குழுவின் ஆய்வை மத்திய மனிதவள அமைச்சகம் மதிப்பீடு செய்து, அந்த குறிப்பிட்ட பல்கலைகளின் எதிர்காலம் குறித்து தனது பரிந்துரைகளை வழங்கும். இதன்பொருட்டு, அமைச்சகத்திற்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படும்.