தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.6 ஆயிரம் கோடியில் 12 ஆயிரம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்!

ரூ.6 ஆயிரம் கோடியில் 12 ஆயிரம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்!

ரூ.6 ஆயிரம் கோடியில் 12 ஆயிரம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்!


UPDATED : அக் 29, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுவதும் உள்ள 3,400 பிற்படுத்தப்பட்ட பகுதிகளில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஆறாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகளில் பயிற்சி பெறும் வகையில், இடைநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்த பட்சம் 10 கம்ப்யூட்டர்கள் மற்றும் சாப்ட்வேர்கள் வழங்கப்படும். இவ்வாண்டில், இதற்காக 12 ஆயிரம் இடைநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள். பிற பகுதிகளைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளிகளிலும், இத்திட்டம் 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்திலேயே அமல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, இணையதள இணைப்பு வசதி ஏற்படுத்தித் தருவதும் அடங்கும். அந்தந்த பகுதிகளை சேர்ந்த இணையதள சேவை அளிப்போர் இதற்கு உதவுவர். இவர்களே, ஆசிரியர்களுக்கும் கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்துவகை பயிற்சிகளையும் அளிப்பர்.


இத்திட்டத்தின் கீழ், இடைநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கப்படும். ஆசிரியர்கள் இணையதள வசதியை பயன்படுத்தி, தாங்களாகவே பிற விவரங்களை கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us