UPDATED : நவ 23, 2009 12:00 AM
ADDED : நவ 23, 2009 08:26 AM
என்.சி.சி., எனும் தேசிய மாணவர் படையின் 62வது ஆண்டு தினம் கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மைதீன்கான் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்த பின் முதலில் உருவாக்கப்பட்ட மாணவர் படை என்.சி.சி., இது ஒரு முன்மாதிரி ராணுவம். இந்த அமைப்பில் உள்ள மாணவர்கள் ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள்.
நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கு, என்.சி.சி., மாணவர்களுக்கு உண்டு. இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக தமிழக அரசு 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. சுனாமியின் போதும், மற்ற இயற்கை பேரழிவின் போதும் என்.சி.சி., மாணவர்களின் பணி குறிப்பிடத்தக்கது. வாழ்வில் சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என்.சி.சி., மாணவர்கள் முன்மாதிரியாக உள்ளனர். இவ்வாறு மைதீன்கான் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமானுக்கான என்.சி.சி.,யின் துணைத் தலைமை இயக்குனர் கமோடர் சர்தாஜ் இமாம், கர்னல் மார்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
