UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM
ADDED : ஜூலை 30, 2024 10:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைத்து இளநிலை படிப்புகளிலும் முதலாம் ஆண்டு தேர்ச்சி அளவுகோலை 50 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக டில்லி பல்கலைக்கழகம் அதிகரித்து உள்ளது.
அதன்படி, டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மாணவர்களும், முதல் மற்றும் இரண்டாவது செமஸ்டர்களில் மொத்தம் 63 சதவீதத்தைப் பெற வேண்டும். இருப்பினும், விளையாட்டு, கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். ஆகியவற்றில் ஈடுபடும் மாணவர்கள் இத்தகைய நிபந்தனைகளில் இருந்து விலக்கு பெறலாம்.
தேசிய கல்விக் கொள்கையின் இளநிலை பாடத்திட்ட கட்டமைப்பு - யு.ஜி.சி.எப்., 2022ன் படி, இத்தகைய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

