UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM
ADDED : ஜூலை 18, 2014 03:42 PM
புதுடில்லி: கடந்த ஆண்டில், சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களில், 67 பேர் உடல் நலத்தகுதி சோதனையில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் விரும்பினால், மறுபடியும் உடல் நலத்தகுதி சோதனையை நடத்தலாம் என, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வு வாரியம், யு.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளுக்கான தேர்வை நடத்தியது. இதன் முடிவுகள், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டன. அதில், 1,122 பேர் தேர்வுக்கு தகுதியாயினர். அதில், ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வானவர்களுக்கு, உடல் நலத்தகுதி சோதனை நடத்தப்பட்டது.
அவர்களில், 67 பேர் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் அவர்களால், அப்பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய மாணவர்கள் விரும்பினால், மறுபடியும் உடல் நலத்தகுதி சோதனை செய்யலாம்; இதை 21 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
