காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 6-வது பட்டமளிப்பு விழா
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 6-வது பட்டமளிப்பு விழா
UPDATED : ஜன 09, 2025 12:00 AM
ADDED : ஜன 09, 2025 08:54 AM

சென்னை:
மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் தோல் ஏற்றுமதி கழகத்தின் தென்னக பிராந்திய தலைவர் அப்துல் வஹாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 2020-ம் ஆண்டின் இளநிலை மற்றும் 2022-ம் ஆண்டின் முதுநிலை, காலணி வடிவமைப்பு, ஃபேஷன் தொழில்நுட்பம் துறையை சேர்ந்த 82 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
நிகழ்ச்சியில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன், பேஷன் தொழில்முனைவோரான எக்ஸ்எக்ஸ்எல் டினா வின்சென்ட், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

