UPDATED : டிச 14, 2024 12:00 AM
ADDED : டிச 14, 2024 11:36 AM

சூலுார்:
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் கணினி அறிவியல் தரவு பகுப்பாய்வு துறை மாணவ, மாணவியர், தூய்மை பணியில் ஈடுபடுத்திக் கூடிய, 70 ரோபோக்களை உருவாக்கினர்.
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், அந்த ரோபோக்களை கொண்டு, 25 நிமிடத்தில், ஆயிரத்து, 150 சதுர அடி பரப்பை தூய்மையாக்கி, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. கே.பி.ஆர்., கல்வி குழும தலைவர் ராமசாமி, செயலர் காயத்திரி அனந்த கிருஷ்ணன் ஆகியோர், மாணவ, மிணவியரை பாராட்டினர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம், டி.ஆர்.டி.ஓ., வளர்ச்சி மேம்பாட்டு பிரிவு மின்னணுவியல் மற்றும் ரேடார் பிரிவின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நந்தகுமார் பேசுகையில், இளைஞர்களின் உந்து சக்தியாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். பாதுகாப்பு சேவைகளுக்கான அதிநவீன சென்சார், ஆயுத அமைப்புகள், இயங்கு தளங்கள், கருவிகளை உருவாக்கி வருகிறோம். ரோபோக்கள் தான் எதிர்காலத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும். அதை வடிவமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால், எதிர்காலத்தில் மேலும் சாதிக்கலாம், என்றார்.
இந்தியா மற்றும் ஆசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் நடுவர் கவிதா ஜெயின், உலக சாதனை நிகழ்வை பதிவு செய்து, சான்றிதழை முதல்வர் கீதாவிடம் வழங்கினார்.