UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 10:56 AM
தமிழக மக்களின் நாடித் துடிப்பாக விளங்கி வரும் தேசிய தமிழ் நாளிதழான, தினமலர் 1951ல் துவங்கி இந்த, 73 ஆண்டுகளில் நாட்டு நலனுக்காக, மக்கள் பணிக்காக தினமலர் சிந்தித்ததும்,சாதித்ததும் பல. சந்தித்த தடைகற்களை வாசகர்கள் துணையோடு வென்றும் வந்திருக்கிறது.தமிழ் பத்திரிகை உலகில் நவீன ஆப்செட் அச்சு முறையில் வெளிவந்த முதல் நாளிதழ், தினமலர் தான். வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர், மாணவர் பதிப்பான பட்டம் என பல்வேறு புதுமைகளை புகுத்தி மக்களின் நலனே உயிர் மூச்சு.... மக்களின் நாடித் துடிப்பாக விளங்கி வருகிறது.சென்னை, வேலுார், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் என 10 பதிப்புகளாக வெளி வருவதோடு, தினமலர் சென்னை பதிப்பு தற்போது பெங்களூரில் கிடைப்பது நீங்கள் அறிந்ததே. வாசகர் உணர்வுடன் எப்போதும் பின்னிப் பிணைந்து அரிய மைல்கல்லை அடைந்துள்ளது நமது தினமலர் நாளிதழ் .
