தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/74 இளநிலை பொறியார் பணியமர்த்தப்படுவர்: முதல்வர் ரங்கசாமி தகவல்

74 இளநிலை பொறியார் பணியமர்த்தப்படுவர்: முதல்வர் ரங்கசாமி தகவல்

74 இளநிலை பொறியார் பணியமர்த்தப்படுவர்: முதல்வர் ரங்கசாமி தகவல்


UPDATED : ஆக 16, 2026 01:14 PM

ADDED : ஆக 16, 2026 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 01:14 PM ADDED : ஆக 16, 2026 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில், ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவில், அவர், பேசியதாவது:


புதுச்சேரியில் தனி நபர் வருமானம் 3 லட்சத்து 6 ஆயிரத்து, 119 ஆக உயர்ந்துள்ளது. பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ. 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை குறைக்க கால்நடைகளுக்கு தரை விரிப்புகளும், குச்சித் தீவன அரவை இயந்திரங்கள் நுாறு சதவீத மானியத்தில், வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தானியங்கி மற்றும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.11.66 கோடி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்.

2025 - 26ம் ஆண்டிற்கான சுத்தம் மற்றும் பசுமை பள்ளி தர மதிப்பீட்டில் 13 பள்ளிகள் தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உயர்கல்வி படிக்கும் மீனவ மாணவர்களின் முழு கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே செலுத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வீடு கட்டும் திட்டதில், பணியை முடிக்க முடியாதவர்கள், அபராத தொகையான 3 ஆயிரம் ரூபாய் மற்றும் நிதியுதிவியை திருப்பி செலுத்தி, பத்திரம் மற்றும் பட்டாவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு நலத்திட்டப் பயன்கள், டிஜிட்டல் பணப்பை மூலம் வழங்கப்படுகிறது.

இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை ரூ.483.51 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ரூ. 500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுகப்படும். கடல் அரிப்பை தடுக்க பிள்ளைச்சாவடி முதல் கனக செட்டிக்குளம் வரை ரூ.33 கோடி மதிப்பில், அரண் அமைக்கும் பணி நடக்கிறது. பொதுப்பணித் துறையில் 74 இளநிலைப் பொறியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மாநில அளவிலான கடல்வழி வாணிப பெருந்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நில பதிவேடுகள் மற்றும் அளவீடுகளை நவீனமாக்கும் நடவடிக்கையாக ட்ரோன் சர்வே மூலம், நில அளவை வரைபடம் தயாரிக்க, இந்திய நில அளவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பம் கையெழுத்தாகியுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிகப்பட்ட குடிநீர் வழங்கல், போக்குவரத்து நெருக்கடியை சீரமைத்தல், இளைஞர்களுக்கு வேலை வாயப்பை பெருக்குதல், மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us