தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான மறு கவுன்சிலிங்; அரசிடம் விளக்கம் பெற உத்தரவு

7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான மறு கவுன்சிலிங்; அரசிடம் விளக்கம் பெற உத்தரவு

7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான மறு கவுன்சிலிங்; அரசிடம் விளக்கம் பெற உத்தரவு


UPDATED : டிச 18, 2020 12:00 AM

ADDED : டிச 18, 2020 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2020 12:00 AM ADDED : டிச 18, 2020 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவ படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாத அரசு பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு மறு கவுன்சிலிங் நடத்தும் விதம் குறித்து அரசு தரப்பு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லுாரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சிலிங்கில் பங்கேற்ற கடலுார் மாவட்டத்தை சேர்ந்த சித்ரா, இலக்கியா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்.அவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மறுநாள் கல்வி கட்டணத்தை வற்புறுத்தாமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களை சேர்த்து கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி தங்களுக்கும் மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 
அரசு மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களை சேர்க்க வசதியாக கூடுதல் இடங்களை உருவாக்க தேசிய மருத்துவ ஆணையம் பரிசீலிக்க வாய்ப்புள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையடுத்து இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் வி.பி.ராமன் ஆஜராகி &'&'மருத்துவ கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கக் கூடது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை தான் தமிழக அரசு அணுக வேண்டும் &'&' என்றார்.
தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி &'&'அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் தமிழக அரசுக்கு வழங்கப் பட்டு விட்டன. 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி அதில் 26 இடங்கள் நிரப்பி கொள்ளலாம்; அரசு பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு மறு கவுன்சிலிங் நடத்தப்படும் &'&' என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் &'&'மாணவியர் இருவரும் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் &'&' என்றார்.
இதையடுத்து 60 மாணவர்களுக்கான மறு கவுன்சிலிங் நடத்தும் விதம் குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us