தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/7.5 சதவீத ஒதுக்கீடு: கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

7.5 சதவீத ஒதுக்கீடு: கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

7.5 சதவீத ஒதுக்கீடு: கவர்னரிடம் அ.தி.மு.க., மனு


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று ராஜ்நிவாசில், கவர்னர் தமிழிசையை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த தி.மு.க., காங்., ஆட்சியில் அ.தி.மு.க., வலியுறுத்தியது. தற்போதைய அரசும் கடந்த 2 ஆண்டாக இச்சட்டத்தை கொண்டுவரவில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மருத்துவ கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டும் ஓரிரு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் நிலை உள்ளது. எனவே, மொத்தமுள்ள 389 அரசின் மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், 28 ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். எனவே கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க முதல்வரின் கருத்தினைக் கேட்டறிந்து உரிய அரசாணை வெளியிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.அவைத் தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், கணேசன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us