தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/7,535 பணியிடங்கள் நிரப்பப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

7,535 பணியிடங்கள் நிரப்பப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

7,535 பணியிடங்கள் நிரப்பப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!


UPDATED : மார் 25, 2025 12:00 AM

ADDED : மார் 25, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2025 12:00 AM ADDED : மார் 25, 2025 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தனது ஆண்டு திட்ட அட்டவணையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும், 1205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு திட்ட அட்டவணைப்படி, தேர்வுகள் கீழ்கண்ட பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் மாதத்தில், அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நுாலகர்கள், உதவி இயக்குனர் (உடற்கல்வி) உள்ளிட்ட 232 பணியிடங்கள்.

மே மாதத்தில், காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்கள்.

ஜூலை மாதத்தில், காலியாக உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 4000 பணியிடங்கள்.

செப்டம்பர் மாதத்தில், முதல்வர்கள் ஆய்வு பணிகளுக்கு (சி.எம்.ஆர்.எப்) 180 மாணவர்கள் பணியிடங்கள்

நவம்பர் மாதத்தில், காலியாக உள்ள முதுகலை உதவி பேராசிரியர்கள் 1915 பணியிடங்கள்.

டிசம்பர் மாதத்தில், காலியாக உள்ள பி.டி. உதவிஅலுவலர்கள் மற்றும் பி.ஆர்.டி.இ ஆகிய 1205 பணியிடங்கள்

மார்ச்-2026 ல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான 51 பணியிடங்கள் உள்ளிட்ட இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பல்கலைகழகங்கள் தேவைக்கேற்ப பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us