8 ஆண்டுகளாகியும் அங்கீகாரம் பெறாத திருவள்ளுவர் பல்கலை!
8 ஆண்டுகளாகியும் அங்கீகாரம் பெறாத திருவள்ளுவர் பல்கலை!
UPDATED : ஜன 17, 2010 12:00 AM
ADDED : ஜன 17, 2010 12:02 PM
இதனால் 79 சுயநிதி கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து எந்த வித உதவியும் பெறவில்லை என திருவள்ளுவர் பல்க லைக் கழக வளர்ச்சிக் கழக தலைவர் ரட்சகர் கூறியுள்ளார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய மன்றக்குழு மற்றும் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பாராட்டு கூட்டம், வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடந் தது.நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக வளர்ச் சிக்கழக தலைவர் ரட்சகர் தலைமை வகித்தார். பொருளாளர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
புதிய ஆட்சி மன்றக்குழுவில் பொறுப்பேற்றுள்ள பல்லவன் கல்வி அறக் கட்டளை நிர்வாக இயக்குனர் போஸ், அகிலாண் டேஸ்வரி கல்லூரி முதல்வர் புஷ்பவள்ளி, டாக்டர் யூஜினா பார்த்திமா மேரி, டாக்டர் செல்வகுமார் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் பரஞ்ஜோதி, கஜபதி, முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கருணானந்தம், ராமச்சந்திரன், ருக் மணி, ஒருங்கிணைப்பாளர் உடையப்பன் உட்பட பலர் பேசினர்.
கூட்ட முடிவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக வளர்ச்சிக் கழக தலைவர் ரட்சகர் நிருபர்களிடம் கூறுகையில், வேலூரில் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டபோதிலும், இதுவரையில் மானியக்குழு அங்கீகாரம் பெறப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட 79 சுயநிதி கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து எந்த வித உதவியும் பெறவில்லை.பல்கலைக்கழக மானியக்குழுவில் பல்கலைகழகத்திற்கு 12பி அந்தஸ்து கிடைக்காததால்தான் இணைப்பு பெற்றுள்ள அனைத்து கல்லூரிகள் வளர்ச்சி பெற முடியாமல் உள்ளன. இணை வேந்தர், துணை வேந்தர் ஆகியோர் முயற்சித்து முன்னுரிமை கொடுத்து இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டும்.இதோடு மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தில் 6 துறைகள் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டாகிறது.
இது வரையில் அவை தொடங்குவதற்கான அறிகுறியே தெரியாமல் உள்ளது. இப்பல்லைக்கழகத்தில் தேவையான அளவில் அதிகாரிகள் நியமனம் செய்யப்படவில்லை. அலுவலர்களும் போதுமான அளவு இல்லை. இதனால் பணிகள் காலதாமதமாகிறது. ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பாமல் உள்ளது. உயர் கல்வித்துறை வளர்ச்சி அடைய வேண்டுமானால் இப்போதுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு தனியாக பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும். இந்த மாவட்டங்கள் 2ம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளதாகும். இம்மாவட்டங்ளில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
இதனால் புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலைமை கல்வி வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆட்சி குழுவில் கல்லூரி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். கல்லூரி நிர்வாகம் சார்பில் முதல்வர்கள், பேராசிரியர்கள் ஒன்று சேர்ந்து 8 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் இந்த பல்கலைக்கழகத்தை கல்வி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான கோரிக்கை மனுக்களை துணை வேந்தரிடம் கொடுக்க உள்ளோம். மாணவர்களின் நலன்காக்க பாடத் திட்டம் மற்றும் தேர்வு ஆகியவைகளை மண்டல அளவில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு பல்கலை., வளர்ச்சிக் கழக தலைவர் ரட்சகர் கூறினார்.
