UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 11:51 AM

புதுடில்லி:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.,) 82 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடன்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 5 கடைசி தேதியாகும்.
தொல்லியல் துறையில் 67 துணை கண்காணிப்பாளர் பணியிடங்களும், 15 மத்திய பாதுகாப்பு ஆய்வாளர் பணியிடங்களும், நிரப்ப யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் பொதுப் பிரிவினருக்கு 32 இடங்களும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 23 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 7 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 5 இடங்களும், PWBD பிரிவினருக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி என்ன?
துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொல்லியல் அல்லது இந்திய வரலாற்றில், பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாற்றை மையமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும். கேபின் பாதுகாப்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
துணை கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும், PWBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், PWBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
* பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.25. பெண்கள், எஸ். சி, எஸ்.டி., மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 5. மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

