UPDATED : ஆக 05, 2011 12:00 AM
ADDED : ஆக 05, 2011 11:44 AM
ஆகஸ்ட் 4ம் தேதியன்று 5007 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 1545 மாணவர்கள் வரவில்லை. 14 மாணவர்கள் கலந்தாய்விற்கு வந்தும், பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். மீதமுள்ள 3448 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்து சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.
இதுவரை கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு வராதோர் விழுக்காடு 22.63 ஆக உள்ளது.
ஜுலை மாதம் 8ம் தேதி முதல் ஒரு நாள் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 82,026 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து உடனடித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்குமான துணைக் கலந்தாய்வு நடைபெறும்.
