தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களில் 87 சதவீதம் பேருக்கு உயர்கல்வியில் அட்மிஷன்

அரசு பள்ளி மாணவர்களில் 87 சதவீதம் பேருக்கு உயர்கல்வியில் அட்மிஷன்

அரசு பள்ளி மாணவர்களில் 87 சதவீதம் பேருக்கு உயர்கல்வியில் அட்மிஷன்


UPDATED : ஜூலை 13, 2026 05:54 PM

ADDED : ஜூலை 13, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 05:54 PM ADDED : ஜூலை 13, 2026 05:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
உயர்கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர் கல்வித்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

2022 - 23 கல்வியாண்டில் 83.89 சதவீதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கை விகிதம், 2023 - 24 கல்வியாண்டில் 93.25 சதவீதமாகவும், 2024 - 25 கல்வியாண்டில் 95.45 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

2025 - 26 கல்வியாண்டுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 11,251 மாணவர்களில் 10,307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 944 பேர் தோல்வியடைந்தோர் அல்லது தேர்வில் பங்கேற்காதவர்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,097 பேர் உயர்கல்விக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 8,979 பேர் ஏற்கனவே பல்வேறு கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். 210 பேர் இது வரை விண்ணப்பிக்கவில்லை.

அதே நேரத்தில், தோல்வியடைந்தோர் அல்லது தேர்வில் பங்கேற்காத மாணவர்களில், 288 பேரும் உயர்கல்வியைத் தொடர விண்ணப்பித்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அதிகளவாக 87 சதவீதம் பேர் உயர்கல்வியில் இணைந்து, உயர்கல்வி சேர்க்கை கணக்கெடுப்பில், கோவை மாவட்டம் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us