UPDATED : நவ 27, 2025 07:03 AM
ADDED : நவ 27, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், கல்விக் கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்க்க பிரசாத் துவக்கி வைத்தார். அனைத்து பொதுத்துறை, தனியார் வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர். உயர் கல்வி கடன் கேட்டு, 127 மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, முகாமிலேயே உடனடியாக 34 பேருக்கு, மொத்தம், 88 லட்சம் ரூபாய் கடன் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ளோருக்கு கடன் அனுமதி வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

