தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை

9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை

9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை


UPDATED : ஜூலை 29, 2021 12:00 AM

ADDED : ஜூலை 29, 2021 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2021 12:00 AM ADDED : ஜூலை 29, 2021 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது, என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 5,000 சதுரடி பரப்பில் 48 வகையான 1,000 மரக்கன்றுகளுடன், 'உயிர்க்கோள்' அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, ஆயிரமாவது மரக்கன்றை நட்டார். அதைத் தொடர்ந்து, &'கல்வி - 40&' என்ற செயலியின் செயல்பாட்டை துவக்கி வைத்தார்; புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையையும் திறந்து வைத்தார்.
பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: 


அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். அரசு பள்ளி களின் தரம் மேம்படுத்தப் படும். அரசு பள்ளி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், பாரபட்சமின்றி அகற்றப்படும்.
கொரோனா மூன்றாவது அலை என்ற அச்சத்தை கடந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அரசின் சுகாதார வழிகாட்டுதல்படி, பள்ளிக்கு அனுப்ப முன் வர வேண்டும். பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம்.
&'நீட்&' தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள குழப்பத்தை நீக்க, தேவையான மாற்றங்களை செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்த பின், தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார். 
நிகழ்ச்சியில், அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்துார் பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us