தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு

9ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு

9ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு


UPDATED : ஜன 26, 2021 12:00 AM

ADDED : ஜன 26, 2021 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2021 12:00 AM ADDED : ஜன 26, 2021 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஒன்பதாம் வகுப்புக்கு, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரத்தை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பிரச்னை காரணமாக, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், மீண்டும், 19ல் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே, புதிய கல்வி ஆண்டு பிறந்து, ஏழு மாதங்கள் வரை, பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மீதமுள்ள நாட்களில், பாடங்களை நடத்தி முடிக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாட விபரங்கள், முதன்மை கல்வி அதிகாரிகளால், பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி, பாடங்கள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்புக்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்டமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விபரங்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
இதற்கிடையில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பள்ளிகளை துவங்குவது குறித்து அதிகாரிகள் அளவில், நேற்று ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us