sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

9 புதிய தடயவியல் வளாகம்

/

9 புதிய தடயவியல் வளாகம்

9 புதிய தடயவியல் வளாகம்

9 புதிய தடயவியல் வளாகம்


UPDATED : டிச 24, 2024 12:00 AM

ADDED : டிச 24, 2024 10:12 PM

Google News

UPDATED : டிச 24, 2024 12:00 AM ADDED : டிச 24, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தின் கீழ், தற்போது போபால்-மத்திய பிரதேசம், சண்டிகர், காம்ரூப்-அசாம், ஹைதராபாத்-தெலுங்கானா, புனே-மகாராஷ்ட்ரா, தில்லி, கொல்கத்தா-மேற்குவங்கம் ஆகிய 7 இடங்களில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. இவைதவிர, 32 மாநில தடய அறிவியல் ஆய்வகங்களும், 97 மண்டல தடய அறிவியல் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.

இந்நிலையில், மத்திய ஆய்வகங்களில் ரூ.126.84 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாக 6 தேசிய இணையவழி தடயவியல் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம், உத்திர பிரதேசம், பீகார், ராஜ்ஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் ரூ.1,309.13 கோடி மதிப்பீட்டில் 2024-25 முதல் 2028-29 வரை கூடுதலாக தடய அறிவியல் வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us