தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?


UPDATED : ஜன 26, 2021 12:00 AM

ADDED : ஜன 26, 2021 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2021 12:00 AM ADDED : ஜன 26, 2021 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது:
 
பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகளை துவங்குவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் ஆலோசித்து, கருத்து கேட்டு, அதன் பின் முடிவு அறிவிக்கப்படும். பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், மாணவியர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று வந்ததாக வதந்தி பரப்பப்படுகிறது. இரண்டு ஆசிரியர்களுக்கு தொற்று சந்தேகம் ஏற்பட்டு பரிசோதித்த போது, இல்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பெற்றோரின் மனநிலையை புரிந்து தகவல் வெளியிட வேண்டும்.தமிழகத்தில், 82 ஆயிரம் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 
தற்போது, ஆசிரியர்கள் தேவையின் அடிப்படையில், அப்போது, தேர்ச்சி பெற்றவர்களை பணியில் நியமிக்கவும், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us